ஹோம் /விருதுநகர் /

பிரின்ஸ் படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடிப்பாரா சிவகார்த்திகேயன்? - மக்கள் கருத்து

பிரின்ஸ் படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடிப்பாரா சிவகார்த்திகேயன்? - மக்கள் கருத்து

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ்

Sivakarthikeyan Starring Prince Movie | இந்தாண்டு தீபாவளி ரிலீசாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

இந்தாண்டு தீபாவளிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து ,கேவீ அனுதீப் இயக்கிய இத்திரைப்படத்தை ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரடெக்சன்ஸ், இனைத்து தயாரித்துள்ளது. தமன் இசையில் உருவான இத்திரைப்படத்தில் சிவாவுடன் மரியா சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பொதுவாகவே சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் காதலும், காமெடியும் கலந்திருக்கும் அதனால் இந்தாண்டு தீபாவளி ரேஸில் பிரின்ஸ் திரைப்படம் வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்தனர். மேலும் இந்த தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் திரைப்படம் எதுவும் வெளியாகாத நிலையில், பிரின்ஸ் திரைப்படம் இந்த தீபாவளிக்கு அதிக கவனம் பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

பிரின்ஸ் படம்

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பிரின்ஸ்?

இத்தனை எதிர்பார்ப்புகளையும் இந்த படம் பூர்த்தி செய்ததா என தெரிந்து கொள்ள படம் பார்த்த ரசிகர்களிடம் கருத்து கேட்ட போது ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே வெளிப்படுத்தினர். சிலர் வழக்கமான சிவகார்த்திகேயன் படங்களில் உள்ள நகைச்சுவை கூட இல்லை என தெரிவித்தனர். இன்னும் சிலர் படம் நன்றாக உள்ளது இந்தாண்டு தீபாவளி வின்னர் பிரின்ஸ் தான் என்று கூறினர்.

வெளியான முதல் நாளே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள பிரின்ஸ் மன்னராக மகுடம் சூடுவாரா இல்லையா என்பது இனி மக்களாகிய ஃபேமிலி ஆடியன்ஸ் கையில் தான் உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Sivakarthikeyan, Tamil Cinema, Virudhunagar