Home /virudhunagar /

பளியர் இன மக்களை தேடி மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி ஒரு பயணம்...

பளியர் இன மக்களை தேடி மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி ஒரு பயணம்...

விருதுநகர்

விருதுநகர் - பளியர் இன மக்கள்

Baliyar Tribes in Virudhunagar | இந்த பூமியில் அனைத்து மனிதர்களும் சமம் என்றாலும் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறோம். நாம் அனைவரும் இயந்திர வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்கும் போது இது எதுவுமே இல்லாமல் இயற்கையோடு இயற்கையாக இய

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
இந்த பூமியில் அனைத்து மனிதர்களும் சமம் என்றாலும் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறோம். நாம் அனைவரும் இயந்திர வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்கும் போது இது எதுவுமே இல்லாமல் இயற்கையோடு இயற்கையாக இயற்கையை நம்பி வாழும் மக்கள் தான் பழங்குடிகள்.

பளியர் இன மக்கள்:

பளியர் எனும் மலைவாழ் மக்கள் நமது விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளதாக அறிந்து அவர்களின் தற்போதைய வாழ்க்கை முறை பற்றி தெரிந்து கொள்ள சென்றோம்.

80கள் வரை மலையில் வசித்து வந்த இம்மக்கள் அதன் பின்னர் மலை அடிவாரத்தில் குடியமர்த்தப்பட்டனர்.செண்பக தோப்பு பகுதியில் இவர்களுக்காக அரசாங்கம் வீடுகள் கட்டி கொடுத்துள்ளது. அங்கு சென்ற போது சொற்ப அளவிலே மக்களை காண முடிந்தது. விசாரித்த போது தான் தெரிந்தது அவர்கள் மலையைவிட்டு கீழே வந்திருந்தாலும் இன்றும் மலையை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலை


கணவன் மனைவி இருவரும் மலைக்கு சென்று அங்கேயே 10 நாட்கள் தங்கி தேன், நன்னாரி போன்ற பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இப்படி மலையில் சுற்றித்திரியும் வெள்ளந்தியான மனிதர்களுக்கு தங்களின் குழந்தைகளின் கல்வி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் இங்கிருக்கும் நிறைய பேர் பத்தாம் வகுப்பு கூட தாண்டவில்லை.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கு காரணமாக இங்கு சரியான போக்குவரத்து வசதி இல்லை என்று கூறப்பட்டாலும் உண்மையில் மக்களுக்கு கல்வி பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பது புரிகிறது. இங்கிருக்கும் படித்த சிலருக்கு அரசு வேலை கொடுக்கும் பட்சத்தில் இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துடன் மற்றவர்களையும் கல்வி கற்க ஊக்கப்படுத்தலாம் என்கின்றனர்.


விருதுநகர் - பளியர் இன மக்கள் வாழும் குடியிருப்புகள்


பளியர் இன மக்கள் வாழ்வியல் பற்றி தேடி வந்த போது மலை வாழ் மக்கள் மலையை விட்டு வந்திருந்தாலும் இன்றும் முன்னேற்றத்தின் விளிம்பு நிலையிலேயே உள்ளனர் என்பது புரிகிறது.
Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி