ஹோம் /விருதுநகர் /

சுய மருத்துவம் ஏன் ஆபத்தானது? - விருதுநகர் சித்த மருத்துவர் கூறுவதை கேளுங்க..!

சுய மருத்துவம் ஏன் ஆபத்தானது? - விருதுநகர் சித்த மருத்துவர் கூறுவதை கேளுங்க..!

X
சுய

சுய மருத்துவம் ஏன் ஆபத்தானது?

Self Medication : இன்றைய காலகட்டத்தில் செல்ப் மெடிக்கேசன் எனப்படும் சுயமருத்துவ முறை வளர்ந்து வரும் நிலையில், அதன் பின்விளைவுகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சுயமருத்துவம் என்று சொல்லப்படும் செல்ப் மெடிக்கேசன் முறையை பின்பற்றி வருவதாக தரவுகள் கூறுகின்றன. சுய மருத்துவம் என்பது நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது மருத்துவரை அணுகாமல் தாமே சுயமாக மருந்துகளை உட்கொள்வது. பொதுவாக மருத்துவரை அணுக இயலாத சுழலில் தான் மக்கள் சுய மருத்துவத்தை கையில் எடுக்கின்றனர் என காரணம் முன் வைக்கப்பட்டாலும் சுயமருத்துவம் என்றுமே தவறு தான் என்று நீண்ட காலமாக கூறப்பபட்டு வருகிறது.

மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கொடுக்க கூடாது என்ற விதிமுறை இருந்தாலும் இன்று காய்ச்சல் என்றால் மெடிக்கல் ஷாப் சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுவோர் இருக்க தான் செய்கின்றனர்.

எச்சரிக்கும் நிபுணர்கள் : 

நோயாளியின் உடல் தன்மைக்கு ஏற்ப மாத்திரைகளையும் அதன் டோஸ்களையும் முடிவு செய்ய ஒரு மருத்துவரால் தான் முடியும். ஏனெனில் எல்லா மருந்துகளும் எல்லோருடைய உடலுக்கு ஒத்து போகாது. அதிலும் இவை பொதுவாக மாத்திரைகள் பக்க விளைவுகள் கொண்டவை. அதனால் எந்த மாத்திரை பக்க விளைவுகள் குறைவு என்பதை நம்மால் அறிந்து கொள்ளவும் முடியாது. மாத்திரையின் தன்மையை அறிந்து கொள்ளாமல் சுயமாக மருந்துகளை உட்கொள்வது என்றுமே ஆபத்து தான் என்கின்றனர் நிபுணர்கள்.

இதுகுறித்து பேசிய விருதுநகரை சேர்ந்த சித்த மருத்துவர் சத்யசீலன், “சுயமருத்துவம், அலோபதி மருத்துவம் மட்டுமல்ல சித்தா ஆயுர்வேதம் இப்படி எந்த மருத்துவ முறையிலும் கூடாது. சுய மருத்துவம் மேற்கொள்வது என்றுமே பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அது எந்த மருத்துவ முறையானாலும் சரி மருத்துவரை ஆலோசிக்காமல் சுய மருத்துவம் எடுக்க கூடாது” என்றார்.

சுய மருத்துவத்திற்கு எது வழிவகுக்கிறது :

மேலும், அவர் கூறுகையில், “பொதுவாக சளி காய்ச்சலுக்கு தான் அதிகமாக சுய மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. முதலில் இந்த சளி, காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது என்ற காரணத்தை அறிந்து அதை தவிர்த்தாலே போதுமானது. வெறுமனே மெடிக்கலில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் மட்டும் சரியாகி விடாது.

நோய் வந்தவுடன் மருத்துவரை தான் முதலில் அணுகவேண்டும். வசதி இல்லாமல் என்போர் தயக்கம் மில்லாமல் அரசு மருத்துவமனைகளை நாடலாம்” என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Health, Local News, Medicine, Virudhunagar