ஹோம் /விருதுநகர் /

35 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்கள் ரீயூனியன்.. விருதுநகர் குல்லூர் சந்தை கிராம பள்ளியில் நெகிழ்ச்சி..

35 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்கள் ரீயூனியன்.. விருதுநகர் குல்லூர் சந்தை கிராம பள்ளியில் நெகிழ்ச்சி..

X
விருதுநகர்

விருதுநகர்

Kullur Sandhai Villeage : குல்லூர் சந்தை கிராமத்தில் உள்ள ஶ்ரீவீரப்ப வித்யாலயா பள்ளியில் பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஶ்ரீவீரப்ப வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி பிரிவு தொடங்கி 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இதில் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். கடந்த 16ம் தேதி ஶ்ரீவீரப்ப வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் 1988ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயின்ற தொழில் கல்வி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், வரவேற்பு நடனத்திற்கு பின்னர் மாணவர்கள் சிலர் தங்களின் பள்ளி நினைவுகள் பற்றி உரை நிகழ்த்தினர். இதனையடுத்து மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்த நண்பர்கள் தங்களின் நினைவைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் 1988ல் பயின்ற மாணவர்கள் சிலர் இந்த சந்திப்பு தங்கள் வாழ்வில் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாகவும், மீண்டும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஏக்கத்தை தருவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய 1988ம் ஆண்டு முதல் தற்போது வரை தொழில் கல்வி பிரிவில் பணியாற்றி வரும் ஆசிரியை இந்திரா பழைய மாணவர்களை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சி என்றும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற சந்திப்பு நிகழ்வுகளை நடத்தி தொடர்ந்து பழைய மாணவர்களோடு தொடர்பில் இருக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Virudhunagar