முகப்பு /விருதுநகர் /

மேட்டமலை அரசு பள்ளியில் 'ஸ்போர்ட்ஸ் டே..' உற்சாகத்துடன் கலந்துகொண்ட விருதுநகர் மாணவர்கள்!

மேட்டமலை அரசு பள்ளியில் 'ஸ்போர்ட்ஸ் டே..' உற்சாகத்துடன் கலந்துகொண்ட விருதுநகர் மாணவர்கள்!

X
மேட்டமலை

மேட்டமலை அரசு பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே

Virudhunagar News | விருதுநகர் மேட்டமலை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை ஊக்குவிக்க தங்களின் கூட்டு முயற்சியால் மாணவர்களுக்கு விளையாட்டு திருவிழா நடத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவகாசி செல்லும் சாலையில் உள்ள மேட்டமலை கிராமத்தில் அமைந்துள்ளது மேட்டமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் மேட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசுப்பள்ளியாக இருப்பினும் மாணவர்களை ஊக்கப்படுத்த பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் மேட்டமலை பள்ளி நிர்வாகத்தினர். அந்த வகையில் பெரிய பெரிய பள்ளிகளை போல நாமும் நம் மாணவர்களுக்கு விளையாட்டு திருவிழா நடத்தலாம் என முடிவு செய்து ஸ்போர்ட்ஸ் டே நடத்தியுள்ளனர் மேட்டமலை பள்ளி ஆசிரியர்கள்.

கடந்த பிப்ரவரி 28,2023 அன்று மேட்டமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்ற விளையாட்டு திருவிழாவில் மாணவர்களுக்கு பாட்டிலில் நீர் நிரப்புதல், சாக்கு போட்டி, தடை தாண்டி ஓட்டம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க : சாம்பல் நிற அணில்கள் சரணாலயம்... பசுமை நிறைந்த ஜில்லென்ற காட்டுக்குள் இருக்கும் இதன் சிறப்புகள் என்ன?

இது பற்றி பேசிய மேட்டமலை பள்ளி ஆசிரியர் மகாலட்சுமி, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் அவர்களின் கூட்டு முயற்சியில் இந்த விளையாட்டு திருவிழாவை நடத்தியுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் மாணவர் நலனுக்காக இது போன்ற நிறைய நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Virudhunagar