முகப்பு /விருதுநகர் /

‘எங்க ஊருக்கு விளையாட்டு மைதானம் வேண்டும்’ : சாத்தூர் இளைஞர்களின் கோரிக்கை 

‘எங்க ஊருக்கு விளையாட்டு மைதானம் வேண்டும்’ : சாத்தூர் இளைஞர்களின் கோரிக்கை 

X
விளையாட்டு

விளையாட்டு மைதானம் கேட்கும் சாத்தூர் இளைஞர்கள்

Mettamalai Village : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேட்டமலை கிராம பகுதியில் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச தடகள பயிற்சி அளித்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Sattur, India

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேட்டமலை கிராம பகுதியில் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றினைந்து கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச தடகள பயிற்சி அளித்து வருகின்றனர். மாணவர்கள் தவறான பாதைக்கு செல்வதை தடுத்து , சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் இவர்கள் தற்போது ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் ஊரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலம் அரசு புறம்போக்கு நிலமாக உள்ள காரணத்தால் வரும் காலங்களில் அரசு இதனை வேறு எதாவது பயன்பாட்டுக்கு இதை எடுத்துக் கொண்டால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள வேறு இடம் இல்லை என்பதால் இந்த இடத்தையே ஊருக்கான விளையாட்டு மைதானமாக மாற்றி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளையாட்டு மைதானம் கேட்கும் சாத்தூர் இளைஞர்கள்

இது பற்றி பேசிய மேட்டமலையை சேர்ந்த விளையாட்டு பயிற்சியாளர் மணிமாறன், எந்த வித பணமும் வாங்காமல் மாணவர்களுக்கு இலவச தடகள பயிற்சி அளித்து வருவதாகவும், இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிலர் மாவட்ட மாநில அளவில் சென்று வெற்று பெற்றுள்ளனர். இன்னும் சிலர் இதில் பயிற்சி மேற்கொண்டு தற்போது அரசு பணியில் உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதை கருத்தில் கொண்டு இந்த இடத்தையே ஊருக்கான நிரந்தர விளையாட்டு மைதானமாக மாற்றி தந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Virudhunagar