முகப்பு /விருதுநகர் /

செல்போனுக்கு மாணவர்கள் அடிமையாவதை தவிர்க்க சாத்தூர் மேட்டமலை இளைஞர்களின் அசத்தல் முயற்சி!

செல்போனுக்கு மாணவர்கள் அடிமையாவதை தவிர்க்க சாத்தூர் மேட்டமலை இளைஞர்களின் அசத்தல் முயற்சி!

X
சாத்தூர்

சாத்தூர் மேட்டமலை இளைஞர்களின் அசத்தல் முயற்சி

Mettamalai village youths give free athletics training for students : இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில், இந்தியாவுக்காக பதக்கம் வாங்கி ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர் சாத்தூர் மேட்டமலை இளைஞர்கள்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கிராமம் தான் மேட்டமலை. சாத்தூர் - சிவகாசி சாலையில் அமைந்துள்ள காரணத்தினாலேயே இங்கு பட்டாசு தொழிற்சாலைகள் தான் அதிகம். பட்டாசு தொழிலையையும் தாண்டி விளையாட்டு துறையிலும் மேட்டமலை கிராமம் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அந்த கிராமத்தை சேர்ந்த, இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கைகோர்த்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இலவச தடகள பயிற்சி அளித்து வருகின்றனர்.

தினமும் காலை மாலை என இருவேளைகளிலும் தற்போது பயிற்சி நடைபெற்றுவரும் நிலையில், இதன் பயிற்சியாளர் மணிமாறன் பேசுகையில், “முதலில் நானும் நண்பர்களும் சேர்ந்து சாலையில் பயிற்சி செய்து வந்தோம். எங்களுடன் பயிற்சி செய்த சிலர் தேசிய அளவில் விளையாட சென்றதை பார்த்த சிலர், எங்களை உற்சாகப்படுத்தி, போதை பழக்கம், செல்போன் என்று கிராம மாணவர்கள் சென்று விடக்கூடாது என்ற நோக்கில், இதை ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி அளவிற்கு செயல்பட வைத்துள்ளனர்” என்றார்.

சாத்தூர் மேட்டமலை இளைஞர்களின் அசத்தல் முயற்சி

இதையும் படிங்க : ஊட்டியில் வலம் வந்த ஜொ்மன் ஷெப்பர்டு, டாபா்மேன்.. பார்வையாளர்களை கவர்ந்த நாய் கண்காட்சி..

தற்போது 60க்கும் அதிகமானோர் இங்கு வந்து பயிற்சி செய்து வரும் சூழலில், சர்வதேச போட்டிகளில் பதக்கம் வாங்கி மேட்டமலை கிராமத்திற்கு பதக்கம் வாங்கி தர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Virudhunagar