ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் | ஆசிரியர் போல பாடம் நடத்தி அசத்தும் 5-ம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவன்

விருதுநகர் | ஆசிரியர் போல பாடம் நடத்தி அசத்தும் 5-ம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவன்

X
பாடம்

பாடம் எடுக்கும் மாணவன்

Virudhunagar | சாத்தூர் அருகே அரசுப்பள்ளி மாணவன் ஆசிரியர் போல பாடம் நடத்தி ஆச்சரியமூட்டி வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

சாத்தூர் அருகே அரசுப்பள்ளி மாணவன் ஆசிரியர் போல பாடம் நடத்தி ஆச்சரியமூட்டி வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மேலகாந்தி நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது நகராட்சி தொடக்கப்பள்ளி. இப்பள்ளி சமீபத்தில் தமிழ்நாட்டின் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான விருது பெற்றிருந்த நிலையில், பள்ளியின் செயல்பாடுகளை பற்றி தெரிந்துகொள்ள அங்கு சென்றிருந்தோம். அப்போது, மாணவர்களின் திறன்களை மேம்படுத்த பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடம் எடுக்கும் மாணவன் :

இதில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஹரிஹரன் ஆசிரியர் போல மாணவர்களுக்கு பாடம் நடத்தி ஆச்சரியமூட்டி வருகிறார்.இன்றைய கல்லூரி மாணவர்களிடம் வகுப்பறையில் எழுந்து வந்து முன்நின்று எதாவது பேச சொன்னால் தயங்குவர்.

அந்த அளவுக்கு மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் கம்யூனிக்கேசன் திறமையும் குறைந்து வரும் சுழலில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர் இந்த வயதிலேயே சிறுபஞ்ச மூலம் எடுத்து வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

சிவகாசியில் தொடரும் விபத்துகள்- விதியை மீறி பட்டாசு ஆலை நடத்துவோர்க்கு அமைச்சர் எச்சரிக்கை

அதை தெளிவாக விளக்கும் திறன் படைத்த மாணவரிடம் கேட்ட போது, தனது பள்ளி ஆசிரியர்கள் தந்த பயிற்சியே இதற்கு காரணம் என்றும், தன்னை போலவே அனைவருக்கும் பயிற்சி தருவதாகவும் தெரிவித்தார்.உண்மையில் இது நல்ல ஒரு முன்னெடுப்பு மற்ற அரசுப்பள்ளிகளும் இதே போன்று செய்தால் நிச்சயம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த முடியும்.

செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar