ஹோம் /விருதுநகர் /

ஆசிரியர் உழைப்பாலே இது சாத்தியம்- சிறந்த பள்ளி விருது பெற்ற சாத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் நெகிழ்ச்சி

ஆசிரியர் உழைப்பாலே இது சாத்தியம்- சிறந்த பள்ளி விருது பெற்ற சாத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் நெகிழ்ச்சி

X
மாணவர்களுடன்

மாணவர்களுடன் தலைமை ஆசிரியர்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி சிறந்த பள்ளிக்கான விருதைப் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேல காந்திநகர் நகராட்சி தொடக்கப்பள்ளி இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த பள்ளி விருதை பெற்றுள்ளது.

கல்வி மற்றும் கல்வி சாரா பணிகள் மற்றும் நிர்வாக பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கானவிருது தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்தாண்டு சிறந்த பள்ளிக்கான விருது பெறும் பள்ளிகளின் பட்டியலில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பள்ளிகள் இடம் பெற்றுள்ளன.அதில் சாத்தூர் மேலகாந்திநகர் நகராட்சி தொடக்கப் பள்ளியும் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து பேசிய மேலகாந்திநகர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை எங்கம்மாள், ‘கடின உழைப்பு மற்றும் பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமானது என்றார்.

மாணவர்களுடன் தலைமை ஆசிரியர்

மேலும் சாத்தூர் வட்டார தொடக்கப் பள்ளிகளிலே மேலகாந்தி நகர் தொடக்கப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை அதிகம் மற்றும் ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கையும் சீராக உள்ளதால் பள்ளிக்கு சுற்று வட்டார பகுதிகளில் நல்ல பெயர் உள்ளதாக கூறுகிறார்.

ஆங்கில கல்வி:

தொடர்ந்து பேசிய அவர், ‘இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களுக்கு ஆங்கில மோகம் அதிகமாகி விட்டது.அதனாலே அதிக பணம் கட்டி பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர்.

பள்ளி மாணவர்

அதெல்லாம் தேவையில்லாத ஒன்று. அரசு பள்ளிகளிலே ஆங்கில வழிக்கல்வி சிறந்த முறையில் கற்பிக்கப்படுகிறது என்பதை நிரூபிக்க முதல் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவித்து அவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க முயற்சி செய்வதாக கூறினார்.

கல்வி சாரா செயல்பாடுகள்:

படிப்பு மட்டும் இன்றி வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தனியே நேரம் ஒதுக்கி, மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணர அவர்களுக்கு பிடித்த செயல்களில் ஈடுபட வைத்து வருவதாக கூறினார்.

ஆசிரியரின் பங்களிப்பு :

சில அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் தங்கள் மாணவர் சேர்க்கையை எப்போதும் சீராக வைத்திருப்பதாகவும் அதுவே பள்ளிக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளதாகவும் கூறியவர் இதற்கு முழுக்க முழுக்க காரணம் ஆசிரியரின் செயல்பாடு தான்.

புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த வேண்டி நூதன முறையில் அன்னதானம் வழங்கிய விருதுநகர் வியாபாரிகள்

ஒரு ஆசிரியர் தான் பெற்றோருக்கு நம்பிக்கை கொடுத்து பிள்ளைகளை பள்ளிக்கு வர வைக்க வேண்டும். நம்பிக்கை கொடுப்பதோடு நின்று விடாமல் மாணவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்கினால் தான் பள்ளியின் மதிப்பு உயரும். மேற்கூறிய அனைத்தும் ஆசிரியரின் கையில் தான் உள்ளது என்றார்.

செய்தியாளர்: அழகேஷ். விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar