முகப்பு /விருதுநகர் /

ஆக்கிரமிப்புகளால் திணறும் சாத்தூர் பேருந்து நிலையம்.. பேருந்துக்கு பதிலாக பார்க் செய்யப்படும் டூ வீலர்கள்..

ஆக்கிரமிப்புகளால் திணறும் சாத்தூர் பேருந்து நிலையம்.. பேருந்துக்கு பதிலாக பார்க் செய்யப்படும் டூ வீலர்கள்..

X
ஆக்கிரமிப்புகளால்

ஆக்கிரமிப்புகளால் திணறும் சாத்தூர் பேருந்து நிலையம்

Sattur Bus Stand : சாத்தூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாமல் இருப்பதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள சாத்தூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி, இருக்கை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக தினசரி உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் அதிகளவில் வந்து செல்லும் இங்கு பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் கூட இல்லாத நிலையில், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தளத்தில் அமர்ந்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகளால் திணறும் சாத்தூர் பேருந்து நிலையம்

இதையும் படிங்க : சுற்றுலா பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஆழ்கடல் அழகை ரசிக்க புதுவையில் தயாராகும் 'செமி சப்மெரின்' படகு!

மேலும் அளவில் சிறிய பேருந்து நிலையமாக உள்ள சாத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் விதிக்கு புறம்பாக இருசக்கர வாகனங்கள் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதால் , பேருந்து நிலையம் இடநெருக்கடிக்கு ஆளாகி வருகிறது.

இதனால் உள்ளே செல்லும் மற்றும் வெளியேறும் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறி வருகின்றன. இதற்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Virudhunagar