முகப்பு /விருதுநகர் /

ஏய் எப்புட்றா? சேவல் முதல் கிளி வரை.. பல குரலில் கலக்கும் சாத்தூர் பள்ளிச் சிறுவன்...

ஏய் எப்புட்றா? சேவல் முதல் கிளி வரை.. பல குரலில் கலக்கும் சாத்தூர் பள்ளிச் சிறுவன்...

X
விருதுநகர்

விருதுநகர் சிறுவன்

Virudhunagar News | விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் ஆடு, மாடு போலவே சத்தம் எழுப்பி மிமிக்கிரி செய்து அசத்தி வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவனான இவர் பாட்டியின் பராமரிப்பில் இருந்து கொண்டு மேட்டமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

தனக்குள் ஒளிந்திருக்கும் திறமையை கண்டறிந்து அதை வெளிப்படுத்துவோருக்கே அங்கீகாரம் கிடைக்கும் என்பதான் நடைமுறையாக இருந்துவருகிறது. இதை மெய்ப்பிக்கும் வண்ணம் தனது பல குரல் திறமையால் இணையத்தில் வைரலாகி வருகிறார் முனியசாமி.

குதிரை முதல் கோழி வரை

அச்சு அசலாக ஆடு, மாடு, கோழி, குதிரை போல் சத்தம் எழுப்புவது, வீட்டில் இருக்கும் குழந்தை அழுவது மற்றும் பைக், தொடர்வண்டி போல ஒலி எழுப்பி அசத்தி வருகிறார். இது பற்றி மாணவர் மிமிக்கிரி செய்து பேசிய வீடியோவும் இனையத்தில் வைரலாகி வருகிறது.

மிமிக்ரி கலைஞராக மாறிய சிறுவன்:

இது பற்றி பேசிய மாணவர் முனியசாமி, ’தான் கொரானா பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருக்கும் போது எதார்த்தமாக ஆட்டுக்குட்டி கத்துவதை கேட்டு அதை போலவே சத்தம் எழுப்பி கற்றுக்கொண்டேன். பின்னர் ஒவ்வொரு விலங்குகளை போல சத்தம் எழுப்பி கற்றுக்கொண்டதாகவும் கூறியவர் இனி வரும் காலத்தில் மிமிக்கிரி கலைஞராக வர வேண்டும் என்று தெரிவித்தார்.

பழைய செய்திகள் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் சிவகாசி நபர்

இதற்கு முன்னர் தமிழ்நாடு அரசு நடத்திய கலைத்திருவிழாவில் மாநில அளவில் பங்கேற்று வெற்றி வாய்ப்பை நூழிலையில் தவற விட்டார். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும் தன்னுடைய திறமை மற்றும் விடா முயற்சியால் தற்போது கவனம் பெற்று வருகிறார். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு இந்த முனியசாமி ஓர் சிறந்த முன்னுதாரணம்.

First published:

Tags: Local News, Virudhunagar