முகப்பு /விருதுநகர் /

சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை - மழையால் வெளியான மறுஅறிவிப்பு

சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை - மழையால் வெளியான மறுஅறிவிப்பு

சதுரகிரி மலை

சதுரகிரி மலை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், மாதத்தில் பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களை முன்னிட்டு மாதத்தில் எட்டு நாட்கள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மலையில் அமைந்திருக்கும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு இன்று (03.02.2023) முதல் 06.03.23 வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என்றும், ஆனால், வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும், பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (வெள்ளிக் கிழமை) மற்றும் நாளை (சனிக் கிழமை) ஆகிய 2 நாட்கள் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரிக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Must Read : கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 150 வயது... இந்த ரயில் நிலையத்திற்கு இத்தனை சிறப்புகளா!

மேலும் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி தினத்தன்று மழை பெய்தால் அனுமதி இல்லை என்றும், மழை பெய்யவில்லை என்றால் அன்று அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பக்தர்கள் யாரும் அனுமதி இல்லாத நாட்களில் தாணிப்பறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Rain, Sathuragiri, Virudhunagar