முகப்பு /விருதுநகர் /

சதுரகிரி மலையில் தனிச் சிறப்புமிக்க நாவல் நீரூற்று... சர்க்கரை வியாதியை போக்குமா?

சதுரகிரி மலையில் தனிச் சிறப்புமிக்க நாவல் நீரூற்று... சர்க்கரை வியாதியை போக்குமா?

X
நாவல்

நாவல் நீரூற்று

Virudhunagar | சதுரகிரி மலையிலுள்ள நாவல் ஊற்றிலுள்ள நீர் சர்க்கரை வியாதியை போக்கும் தன்மையைக் கொண்டது என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையிலுள்ள நாவல் நீருற்று சர்க்கரை வியாதியை தீர்க்கும் என்று பொதுமக்களால் நம்பப்படுகிறது.

நாவல் நீருற்று:

புகழ்பெற்ற ஆன்மீக மலை ஏற்றத் தளமான விருதுநகர் மாவட்ட சதுரகிரி மலையில், சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் இயற்கையாக நாவல் மரத்தடியில் உருவாகி வரும் நீருற்றைக் காண முடியும். நாவல் மரத்தின் அடியில் இருந்து வருவதால் அதற்கு நாவல் ஊற்று என்று பெயர்.

பல நோய்கள் தீர்க்கும் அபூர்வ மூலிகைகள் கொண்ட இம்மலையில் உள்ள இந்த நாவல் ஊற்றுக்கு சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக கூறப்படுகிறது.

நாவல் நீரூற்று

சர்க்கரை வியாதிக்கு சர்வதேச அளவில் மருந்து வியாபாரம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, இந்த சாதாரண நீருக்கு எப்படி இப்படி ஒரு சக்தி வந்தது என்ற கேள்வியும் எழுகிறது.

பொதுவாக சித்த மருத்துவத்தில் நாவல் பழம் சர்க்கரை வியாதிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருக்கையில் இந்த நீருற்று, நாவல் மரத்தடியில் உற்பத்தியாகி வருவதால் நாவல் மரத்தின் வேர்கள் மற்றும் நாவல் மர இலைகள் பட்டு மருந்துவ குணம் பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த நாவல் ஊற்று நீரைத் தொடர்ந்து குடித்தால் சர்க்கரை வியாதியில் இருந்து குணமடையலாம் என்பதால் சதுரகிரி மலையேற வரும் பக்தர்கள் இந்த நீரை பாட்டிலில் எடுத்து செல்கின்றனர். பார்க்க தெளிவாக கண்ணாடி போல் இருக்கும் நாவல் நீருற்று நீரை அள்ளி பருகினால் அவ்வளவு தித்திப்பாக இருக்கும் என்பது தனி சிறப்பு.

விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

சதுரகிரி மலையேறும் போது பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமான இடம் இந்த நீருற்று. இதுவரை இந்த நீருற்றை பார்க்காதவர்கள் அடுத்த முறை இங்கு சென்று நீரை குடித்து பார்க்கவும்.

First published:

Tags: Local News, Virudhunagar