Home /virudhunagar /

Virudhunagar | சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க 4 நாட்கள் அனுமதி - பக்தர்கள் மகிழ்ச்சி

Virudhunagar | சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க 4 நாட்கள் அனுமதி - பக்தர்கள் மகிழ்ச்சி

சதுரகிரி

சதுரகிரி

Sadhuragiri Sundaramahalingam Temple | விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar | Tamil Nadu
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் செப் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு வருகிற 23-ம் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) முதல் 26-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:  சுற்றுலா பயணிகளை கவரும் திருச்சுழி ரமண மகரிஷி பிறந்த வீடு.. 

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:   பளியர் இன மக்களை தேடி மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி ஒரு பயணம்...

வருகிற 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கப்படுவதால் நவராத்திரி திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்புகள் வெளியிடப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வனத்துறை கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை 4 நாட்களுக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது. இதை மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பக்தர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி