Home /virudhunagar /

தமிழ்நாடு பெயருக்காக உயிரைத் தியாகம் செய்த சங்கரலிங்கனார்- வரலாற்றை நினைவுபடுத்தும் மணிமண்டபம்

தமிழ்நாடு பெயருக்காக உயிரைத் தியாகம் செய்த சங்கரலிங்கனார்- வரலாற்றை நினைவுபடுத்தும் மணிமண்டபம்

சங்கரலிங்கனார் நினைவகம்

சங்கரலிங்கனார் நினைவகம்

தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக உயிரைத் தியாகம் செய்த சங்கரலிங்கனாருக்கு விருதுநகரில் மணிமண்டபம் வைத்து சிறப்பு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    விருதுநகர் கல்லூரி சாலை பக்கம் சென்றால் நகராட்சி பூங்காவிற்கு அருகில் ஓர் அழகிய மணி‌ மண்டத்தை காணலாம். பசுமை போர்த்திய அதன் அழகு நம்மை கவர்ந்திழுக்க அதில் என்ன இருக்கிறது என்று போய் பார்க்கும் போது அதில் தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம் என எழுதப்பட்டிருந்தது. யார் இந்த சங்கரலிங்கனார் இவருக்கும் நம் விருதுநகருக்கும் என்ன சம்பந்தம் என்று தேடிய போது பல உண்மைகள் தெரிய வந்தன,

    எங்கள் மண்ணின் மைந்தன் என காமராஜரை கொண்டாடும் பலருக்கும் விருதுநகர் மண்ணின் மற்றொரு மைந்தன்‌ சங்கரலிங்கனாரை பற்றி பெரிய அளவில் தெரிவதில்லை.

    யார் இந்த சங்கரலிங்கனார்?

    1895-ம் ஆண்டு இன்றைய தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த காலம். அன்று விருதுநகரில் பெரிய கருப்பசாமி, வள்ளியம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் தான் இந்த சங்கரலிங்கனார்.

    சங்கரலிங்கனார் நினைவு மண்டபம்


     

    காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து நாட்டு விடுதலைக்காக போராடி வந்த இவர் காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு காந்தியவாதியாக விளங்கினர். தன் வாழ்நாளில் பல போராட்டங்களில் கலந்து கொண்டு நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்தவர்.

    சங்கரலிங்கனார் நினைவு சிலை


    தமிழ்நாடு பெயர் மாற்றம்

    மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர்‌ மாற்றியது யார்‌ என கேட்டால் முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை என்பது பதிலாக இருக்கும். ஆனால் அந்த பெயர் மாற்றத்திற்கு பெரிய உந்து கோலாய் அமைந்தது ஒருவரின் உயிர் தியாகம் என்பதை வெகு சிலரே அறிவர்.

    சங்கரலிங்கனார் நினைவு மண்டபம்


    ஆம் மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர்‌ மாற்றி கோரி 27.07.1956 முதல் 13.10.1956 வரை கிட்டத்தட்ட 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, உயிர்‌நீத்து பெயர் மாற்ற கோரிக்கையை வலுப்பெறச்செய்தவர் தான் இந்த சங்கரலிங்கனார்.
    அதன் பின்னரே 1968 டிசம்பர் 1 அன்று தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    நினைவு மணிமண்டபம்:

    தியாகி சங்கரலிங்கனார் நினைவாக தமிழக அரசு கடந்த 2015ம் ஆண்டு கல்லூரி சாலையில் இந்த மணிமண்டபத்தை அமைந்தது.
    சுற்றிலும் நான்கு சிறிய மண்டபங்கள் அமைக்கப்பட்டு நடுவில் தியாகி சங்கரலிங்கனார் சிலையும் காணப்படுகிறது.

    சங்கரலிங்கனார் நினைவு மண்டபம் உட்பகுதி


    ரம்யமாக இருக்கும் வகையில் சுற்றிலும் சிறிய அளவில் பூச்செடிகளை கொண்டு தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.
    பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சங்கரலிங்கனார் நினைவுச்சிலை தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்பதால் பார்வையாளர்கள் குறைவாகவே வந்து செல்வதாய் கூறுகின்றனர்.

    சங்கரலிங்கனார் பற்றிய வேறு சில குறிப்புகளை உடன் வைத்திருந்தால் பார்வையாளர்களை ஈர்த்து அதன் மூலம் சங்கரலிங்கனாரின் தியாகத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம் என்கின்றனர் பார்வையாளர்கள். குறைந்த பட்சம்‌ மாவட்ட மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலாவது சங்கரலிங்கனார்‌ பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி