நம் மாநிலத்தின் பெருமை சொல்லும் வகையில் அமைந்த "தமிழ்நாடு" என்ற இந்த பெயரை சொன்னாலே தமிழர் அனைவர் மனதிலும் ஒரு தனி உணர்வு உண்டாகும். இந்தியாவிலேயே தன் தாய்மொழியையே அதன் பெயராக கொண்ட ஒரே மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். தமிழ்நாடு என்ற பெயர் எவ்வளவு உண்ர்ச்சிபூர்வமானது என்பதை சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் நமக்கு உண்ர்த்தியிருக்கும்.
தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. இந்த பெயரின் வரலாற்றை உற்று நோக்கினால் அதில் ஒருவரின் உயிர் தியாகம் ஒளிந்திருக்கும். அவர் தான் தியாகி சங்கரலிங்கனார்.
1985ல் ஜனவரி 26 ம் தேதி விருதுநகரில் பிறந்தவர் இவர். காமராஜர் பிறந்த ஊரில் பிறந்த இவர் அவர் படித்த பள்ளியிலே பயின்று அவரை போன்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டின் விடுதலைக்காக போராடினார். நாடு விடுதலை பெற்ற பின்னர் அதோடு நில்லாமல் அரசியலில் சேர்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு வந்தார்.
மெட்ராஸ் டூ தமிழ்நாடு:
இன்றைய தமிழ்நாடு அன்று மெட்ராஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. அப்போது தான் 1956ம் ஆண்டு ஜூலை 26 ம் நாள் விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை மேட்டில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கினார் சங்கரலிங்கனார். அதில் மெட்ராஸ் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றிருந்தது. பின்னர் அங்கிருந்து தேசபந்து மைதானம் வந்து அங்கே உண்ணா விரதத்தை தொடர்ந்தார்.
இதனால் தலைவர்களுக்கு ஒருவிதமான நெருக்கடி ஏற்படவே காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் சங்கரலிங்கனார் பின்வாங்கவே இல்லை. 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டு அக்டோபர் 16 ம்தேதி 1956ல் உயிரிழந்தார்.
தமிழ்நாடு:
அவரின் உயிழப்புக்கு பின்னரே தமிழ்நாடு கோரிக்கை வலுப்பெற்று, போராட்டம் தீவிரம் அடைந்தது. தொடர்ந்து பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் 1968ல் டிசம்பர் 1 ம் தேதி மெட்ராஸ் தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு பெயர் வர சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம் தான் முக்கிய காரணம் என்றாலும் தமிழ்நாட்டிலும் சரி அவர் பிறந்த விருதுநகரிலும் சரி,அவர் ஒரு அறியப்படாத தலைவராகவே உள்ளார். பல ஆண்டுகளுக்கு பின்பு தான் விருதுநகரில் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டது. அதிலும் கூட அவரை பற்றிய விபரங்கள் முழுமையாக இல்லை என்பது தான் குறையாக உள்ளது.
விவசாய நிலங்களில் தேனீ வளர்ப்பு: இரட்டிப்பு லாபம் பெறும் விருதுநகர் விவசாயியின் கதை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar