ஹோம் /விருதுநகர் /

Pongal 2023 : பொங்கல் விற்பனையில் வண்ணம் தீட்டிய மண்பானைகள்.. விருதுநகர் மார்க்கெட்டில் களைகட்டும் வியாபாரம்..

Pongal 2023 : பொங்கல் விற்பனையில் வண்ணம் தீட்டிய மண்பானைகள்.. விருதுநகர் மார்க்கெட்டில் களைகட்டும் வியாபாரம்..

X
விருதுநகர்

விருதுநகர்

Pongal Sale 2023 : பொங்கல் பண்டிகையையொட்டி விருதுநகர் மார்கெட்டில் பொங்கல் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா வரும் 15ம் தேதி கொண்டாட பட உள்ளது. இந்நாளில் விவசாயம் செழிக்க உதவி புரிந்த சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டு வந்தனர் நம் முன்னோர்கள். இன்னும் அதன் தொடர்ச்சியாக பொங்கலன்று புதுப்பானைகளில் பொங்கல் வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட சூழலில் விருதுநகர் மார்க்கெட்டில் புதுப்பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த பானைகள் யாவும் சுற்றுவட்டார பகுதிகளான மேலூர், மானாமதுரை போன்ற இடங்களில் இருந்து விருதுநகருக்கு விற்பனைக்கு வருகின்றன. இதில் வாடிக்கையாளரை கவரும் விதமாக புதுப்பானைகளில் வண்ணம் தீட்டி விற்பனை செய்து வருகின்றனர் வியாபாரிகள். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் காரணத்தால் பொங்கல் வைத்தல் மற்றும் விளையாட்டு போட்டிகளில் நடைபெறும் உறியடித்தல் போன்ற நிகழ்வுகளுக்கு மண் பானைகளை மக்கள் வாங்கி செல்வர்.

இந்நிலையில், சாதாரண பானைகளை விட வண்ணம் தீட்டப்பட்ட பானைகளையே அதிகளவில் வாங்கி செல்வதாக கூறுகின்றனர் வியாபாரிகள். விருதுநகரில் 50 ஆண்டுகளாக பானைகள் விற்பனை செய்து வரும் பிச்சைப் பாண்டியம்மாள் முன்பை விட தற்போது மண் பானையில் பொங்கல் வைக்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Pongal 2023, Virudhunagar