ஹோம் /விருதுநகர் /

இதற்கெல்லாம் முழுப்பொறுப்பு ‘அவர்’ தான்.. ஓய்வூதியம் வழங்க கோரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விருதுநகரில் காத்திருப்பு போராட்டம்..

இதற்கெல்லாம் முழுப்பொறுப்பு ‘அவர்’ தான்.. ஓய்வூதியம் வழங்க கோரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விருதுநகரில் காத்திருப்பு போராட்டம்..

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

Virudhunagar Today News | ஓய்வூதியம் உட்பட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு 31.10.2022 அன்று ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் 2000 - 2005 ம் ஆண்டுகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு நிதி ரூபாய் 5000ஐ நீதிமன்ற உத்தரவின் படி உடனடியாக வழங்க வேண்டும் என்றும், சிவகாசி கிருஷ்ணப்பேரி ஆசிரியை ராணி ஓய்வு பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஓய்வூதியம் கிடைக்க பெறவில்லை. அவருக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க சிவகாசி கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க:  கும்பகோணத்தில் பிறந்து மலையாளத்தில் பிரபலமான நடிகர் - யார் தெரியுமா?

அரசு விடுதிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை அவரவர் வசம் வழங்க வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற ஆசிரியர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செலவு தொகையை இதுவரை திரும்ப வழங்காமல் உள்ளதாகவும் அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பேசிய ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவபெருமான் இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக கேட்டு வருவதாகவும், இதற்கெல்லாம் முழுப்பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர் தான். அவர் தான் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதனால் தான் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar