ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் டூ மானாமதுரை.. கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை..!

விருதுநகர் டூ மானாமதுரை.. கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை..!

X
விருதுநகர்-மானாமதுரை

விருதுநகர்-மானாமதுரை ரயில் பாதையில் கூடுதல் இரயில்களை இயக்க கோரிக்கை 

விருதுநகர் - மானாமதுரை ரயில் பாதையில் குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்படுவதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகர் - மானாமதுரை இரயில் பாதையில் குறைந்த அளவிலான இரயில்களே இயக்கப்படுவதால் கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகரில் இருந்து மானாமதுரை வரை செல்லும் 67 கி.மீ நீளமுள்ள இரயில் பாதை கடந்த 1963ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, அவரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2013 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்த இரயில் பாதை அகல இரயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டு, 271 கோடி ரூபாய் செலவில் அகல இரயில் பாதையாக மாற்றப்பட்டு 2013ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

இதையடுத்து விருதுநகர் மானாமதுரை இடையிலான இரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை புதுச்சேரி - கன்னியாகுமரி ரயில், சென்னை -  செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் மாவட்டத்தின் கிழக்கு பகுதியை சேர்ந்த மக்கள், சென்னை கோவை பெங்களூர் போன்ற பெருநகரங்களுக்கு செல்ல அருப்புக்கோட்டை திருச்சுழி பகுதியில் இரயில் நிலையம் இருந்தும் அவற்றை தவிர்த்து விருதுநகர் இரயில் நிலையமே வர வேண்டிய நிலை உள்ளது.

இந்த பாதையில் கூடுதல் இரயில்கள் இயக்கப்படும் பட்சத்தில் அது மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளான அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதியை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள் என்பதால் கூடுதல் இரயில்களை இயக்க இரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

First published:

Tags: Local News, Manamadurai, Train, Virudhunagar