ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் - சென்னை நேரடி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்குவது எப்போது?

விருதுநகர் - சென்னை நேரடி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்குவது எப்போது?

விருதுநகர்

விருதுநகர் - சென்னை நேரடி ரயில் சேவை

Virudhunagar to Chennai Train Services | விருதுநகரில் இருந்து சென்னைக்கு நேரடி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகரில் இருந்து சென்னைக்கு நேரடி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் இரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது ரயில்வேயின் விதி. இதன்பபடி தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு  ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மதுரையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லையிலிருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரியில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், தூத்துக்குடியில் இருந்து முத்து நகர் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தென்காசியில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க:  திருமண தடை நீங்க விருதுநகரில் வழிபடவேண்டிய முக்கிய கோவில்

இப்படி தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும்  ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மட்டும் இதுவரை சென்னைக்கு ரயில் இயக்கப்படாமலே உள்ளது.

விருதுநகர் ரயில் நிலையம்

இதனால் விருதுநகர் மக்கள் சென்னை செல்வதற்கு, தெற்கு நோக்கி செல்லும் ரயில்களையே நம்பியுள்ளனர். மேலும் இந்த ரயில்களுக்கு விருதுநகர் ஒரு இடைப்பட்ட  ரயில் நிலையமாக செயல்படுவதால், இதற்காக முன்பதிவு சீட்டுகள் தொடங்கிய இடத்திலேயே நிரம்பி காலியாகி விடுகின்றன. இதனால் விருதுநகர் மாவட்ட மக்கள் பெரும்பாலான நேரங்களில் முன்பதிவு செய்திருந்தும் வெயிட்டிங் லிட்டில் காத்திருக்கும் நிலையே தொடர்கின்றது.

மேலும் முன்பதிவு இல்லாத இரயில்களை பொருத்த வரை இரயிலானது தொடங்கிய இடத்திலேயே பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விடுவதால் இடையில் ஏறுபவர்கள் கூட்டநெரிசலில் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு விருதுநகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி வழியாக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு நேரடி இரயில் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar