ஹோம் /விருதுநகர் /

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி குறித்த முக்கிய தகவல்

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி குறித்த முக்கிய தகவல்

அருப்புக்கோட்டை பேருந்துநிலையம்

அருப்புக்கோட்டை பேருந்துநிலையம்

Virudhunagar District New | விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி குறித்து அதிகாரிகள் முக்கிய தகவலை தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

அருப்புக்கோட்டை நகர்மன்ற குழுவின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் அசோக்குமார் பேசுகையில், 8-வது வார்டில் நகரசபை பதிவு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற உள்ளதால் நகர மன்ற உறுப்பினர்கள் அந்தப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கூட்டத்தில் தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.

பொறியாளர் ரவீந்திரன் கூறுகையில், அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளது. மேலும் புதிதாக பொருத்தப்படும் தெருவிளக்குகள் அனைத்தும் எல்.இ.டி. விளக்குகளாக பொருத்தப்படும். மேலும் நகர் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று விரிவாக்க பகுதிகளில் தெரு விளக்குகள் பொருத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

Must Read : கும்பகோணத்தில் பிறந்து மலையாளத்தில் பிரபலமான நடிகர் - யார் தெரியுமா?

துணைத்தலைவர் பழனிச்சாமி கூறுகையில், நகர் மன்ற உறுப்பினர்கள், பொறியாளர் பிரிவில் கொடுக்கப்படும் கோரிக்கைகள் தீர்வு காணப்படுவதில்லை என கோரிக்கை வைத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் சுகாதாரப்பிரிவுக்கும், பொறியாளர் பிரிவுக்கும் தனி தனியாக கூட்டம் அமைத்து உங்களது கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Virudhunagar