முகப்பு /விருதுநகர் /

விருதுநகரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை.. ஆரத்தழுவி அன்பை பகிர்ந்த இஸ்லாமியர்கள்!

விருதுநகரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை.. ஆரத்தழுவி அன்பை பகிர்ந்த இஸ்லாமியர்கள்!

X
விருதுநகரில்

விருதுநகரில் ரம்ஜான் சிறப்பு தொழுகை 

Ramzan Special Prayer in Virudhunagar | விருதுநகரில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி ஒருவருக்கொருவர் ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

ரமலான் மாதம் தொடங்கியது முதல் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 21) மாலை தமிழகத்தில் பிறை தென்பட்டதால் இன்று (22.04.23) ஈகை பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் உற்சாகமாக ஈகை திருநாளை வரவேற்க தயாராக தொடங்கினர்.

அதன்படி விருதுநகரில் ரம்ஜானை முன்னிட்டு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் சார்பில், மாவட்ட மைய நூலகம் அருகே உள்ள மைதானத்தில் சிறப்பு தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 6.30 க்கு தொடங்கிய இந்த இறை வழிபாட்டில் ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள், சகோதரிகள், குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காலை 6.30க்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்ற இந்த வழிபாட்டின் இறுதியில் அனைவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டு ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இதனையடுத்து விருதுநகர் ஹாஜிபி பள்ளி மைதானம், நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளி மற்றும் கல்பள்ளிவாசல்களில் அந்தந்த ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்ட நிலையில், அங்கேயும் ஏராளமான இஸ்லாமிய பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

top videos
    First published:

    Tags: Local News, Ramzan, Virudhunagar