ஹோம் /விருதுநகர் /

வீட்டில் இருந்தே சாதிக்கலாம்... துணிப்பைகள் தயாரித்து அசத்தி வரும் ராஜபாளையம் பெண்கள்..

வீட்டில் இருந்தே சாதிக்கலாம்... துணிப்பைகள் தயாரித்து அசத்தி வரும் ராஜபாளையம் பெண்கள்..

X
ராஜபாளையம்

ராஜபாளையம்

Virudhunagar District News : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த பெண்கள் துணியால் கைப்பைகள் செய்து அசத்தி வருகின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

அடுப்பூதும் பெண்களுக்கு அறிவூட்டும் கல்வி எதற்கு என்று கேட்டதெல்லாம் அந்த காலம். இன்று காலம் நிறையவே மாறிவிட்ட சூழலில் பாரதி கண்ட புதுமை பெண்களெல்லாம் இன்று வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு போய் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில், வீட்டில் இருந்து சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டு இருக்கின்றனர் சிலர்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கீதா தனது சகோதரி விஜயலட்சுமி மற்றும் சில பெண்களோடு சேர்ந்து துணியில் கைப்பைகள் மற்றும் பர்ஸ்கள் செய்து வருகின்றனர்.

விதவிதமான டிசைன்களில் கைப்பைகள் தயாரித்து வரும் இவர்கள், தினசரி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மீதம் இருக்கும் நேரத்தில் இப்படி பைகளை தயார் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய விஜயலட்சுமி, “வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத ஒரு சூழல் இருந்தது. வீட்டிலேயே எதாவது சுயதொழில் செய்யலாம் என நினைத்து கொண்டிருக்கும் போது தான் இப்படி பைகள் தயாரிக்கும் எண்ணம் வந்தது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : விருதுநகர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு... நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

இந்த குழுவில் இருக்கும் கீதா ஏற்கனவே டெய்லராக இருப்பவர். அவர் இந்த பை தயாரிக்கும் முறையை மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் கற்றுக்கொண்டு அதை உடன் இருப்பவர்களுக்கு கற்று தந்து தற்போது சுயதொழிலாக செய்து வருவதாக தெரிவித்தார்.

தற்போது பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இது போன்ற துணி பைகளை பயன்படுத்தலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு விழாக்களில் அரங்குகள் அமைத்து விற்பனை செய்து வருவதாகவும், எவரேனும் தங்கள் வீட்டு விஷேங்களுக்கு தாம்பூல பைகள் வழங்க ஆர்டர் செய்தால் அவர்கள் விரும்பும் டிசைன்களில் செய்து தருவதாகவும் கூறினர்.

அவர்கள் சொல்வதும் சரிதான். இது போன்ற துணி பைகளை வாங்குவதன் மூலம் சுற்றுச்சூழலையும்பாதுகாக்கலாம். சுயதொழில் செய்வோரையும் ஊக்குவிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், துணி பைகள் ஆர்டர் செய்ய விரும்புவோர் 91502 04563 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

First published:

Tags: Local News, Virudhunagar