விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மின் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஜூன் 16 - வியாழன்) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதன் காரணமாக மின் விநியோகம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி, கலங்காபேரிபுதூர், ராஜீவ் காந்தி நகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: 250 ஆண்டு பழமையான மாதா கோயில்... சமய பாகுபாடின்றி, பொங்கல் வைத்து கொண்டாடும் மக்கள்..
ஆகையால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.