ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் வானிலை எப்படி இருக்கு? மழை வருமா?

விருதுநகர் மாவட்டத்தில் வானிலை எப்படி இருக்கு? மழை வருமா?

விருதுநகர்

விருதுநகர் - வானிலை எப்படி?

Virudhunagar Weather Update | தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை வானமானது காலை முதல் மேக மூட்டமாக காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்இன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மழை மறைவு பகுதியாக அறியப்படும் விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை வானமானது காலை முதல் மேக மூட்டமாக காணப்படுகிறது.

கடந்த வாரம் முழுவதும் பரவலான மழைப்பொழிவை பெற்றுள்ள நிலையில், இந்த வாரம் இதுவரை மழைப்பொழிவு ஏதும் பதிவாகவில்லை.தற்போது மற்ற பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டு வரும் சுழலில் விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்படுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட துவங்கியுள்ளன.

மேலும் படிக்க : திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

இதனால் காலை முதலே பள்ளி கல்லூரி செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.

பொதுவாக வெயில் மனிதர்களின் பூமியாக கருத்தப்படும் விருதுநகரில் தற்போது 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த வாரம் முழுவதும் வெயில் சற்று குறைந்து குளிர்ந்த வெப்பநிலை காணப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் இன்று மாவட்டத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையோ அல்லது மிதமான மழையோ பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Arun
First published:

Tags: Heavy rain, Heavy Rains, Local News, Virudhunagar