ஹோம் /விருதுநகர் /

பேருந்து வசதி இல்லாத விருதுநகர் ரயில் நிலையம்.. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு எப்போது?

பேருந்து வசதி இல்லாத விருதுநகர் ரயில் நிலையம்.. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு எப்போது?

விருதுநகர்

விருதுநகர் ரயில் நிலையம்.

Virudhunagar Railway Station | விருதுநகர் ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகரின் வடக்கே அமைந்துள்ள இந்த இரயில் நிலையம் தென் தமிழகத்தின் மிக முக்கிய ரயில்வே சந்திப்பாக உள்ளது. இவ்வழியே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் அனைத்து  ரயில்களும் நின்று செல்கின்றன. மேலும் இங்கிருந்து, மானாமதுரை முதலான இடங்களுக்கு நேரடி இரயில் இயக்கப்பட்டு வருகிறது.மேலும் இது தமிழகத்தின் மிக நீண்ட நடைமேடை கொண்ட இரயில் நிலையம் என்ற பெருமைக்குரியது.

விருதுநகரில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல நேரடி பேருந்துகள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான மக்கள்  ரயில் சேவையே பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை முதலான பகுதிகளை சேர்ந்த மக்களும் விருதுநகர் ரயில் நிலையத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: விஜய் படமே இங்கதான் எடுத்திருக்காங்க பாருங்களேன்..! இந்த கோயில்ல இத்தனை படங்கள ஷூட் பண்ணிருக்காங்களா?

பேருந்து வசதி இல்லை:

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் இங்கு வரும் பயணிகள் பேருந்திற்காக, நடந்து பழைய பேருந்து நிலையம் வரை செல்ல வேண்டி உள்ளது. இது தொடர்பாக பல முறை கோரிக்கை வைத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் சிரமப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு குறைந்த பட்சம் காலை மற்றும் மாலை நேரங்களிலாவது பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Southern railway, Virudhunagar