முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநாய்கடி தடுப்பூசி முகாம்..  

விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநாய்கடி தடுப்பூசி முகாம்..  

X
மாதிரி

மாதிரி படம்

Virudhunagar news : விருதுநகரில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய்களுக்கான இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய்களுக்கான இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் செல்லப்பிராணிகளான நாய்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்பு துறையின் அறிவிறுத்தலின்படி தற்போது தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வெறிநாய்கடி தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விருதுநகரில் உள்ள தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11வது வெறிநாய்கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குநர் கோவில் ராஜா, துணை இயக்குநர் நந்தகோபால் மற்றும் விருதுநகர் நகர் மன்ற தலைவர் எஸ்.ஆர்.மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர்.

இதனையடுத்து பள்ளி மாணவிகளுக்கு வெறிநாய்கடி பற்றியும், வெறிநாய் கடி தடுப்பூசி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து பேசிய மண்டல இயக்குநர் ராஜா, “விருதுநகர் மாவட்டத்தில் நாய் தொல்லைகளை குறைப்பதாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற முகாம்கள் மூலம் மாவட்டத்தில் 135 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் இதுபோன்ற முகாம்களை ஏற்படுத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Virudhunagar