ஹோம் /விருதுநகர் /

கவனிக்குமா விருதுநகர் நகராட்சி? சேதமடைந்த அல்லம்பட்டி சாலையால் பொதுமக்கள் அவதி!!

கவனிக்குமா விருதுநகர் நகராட்சி? சேதமடைந்த அல்லம்பட்டி சாலையால் பொதுமக்கள் அவதி!!

விருதுநகர் 

விருதுநகர்  அல்லம்பட்டி

Virudhunagar Latest News | விருதுநகர் அல்லம்பட்டி  முக்கு ரோடு அருகே உள்ள சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால், விரைந்து இச்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகர்  அல்லம்பட்டி பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விரைந்து இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர் அல்லம்பட்டி  முக்கு ரோடு அருகே உள்ள சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. முக்கு ரோட்டில் இருந்து அல்லம்பட்டிக்குள் செல்லும் சாலை என்பதால் இதில் அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன.

பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை போன்ற பகுதிகளுக்கு செல்ல மக்கள் இந்த பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் லாரி முதலான வாகனங்களும் இவ்வழியே தான் வந்து செல்கின்றன.

மேலும் படிக்க: தஞ்சை ராஜராஜ சோழனின் மனைவி புதைக்கப்பட்ட இடம் இதுதானா! - பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில்

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலை தற்போது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு குழிகளில் மணல் கொண்டு நிரப்பி, குழியானது மூடப்பட்டு உள்ளது. தற்போது குழி மணல் கொண்டு மூடப்பட்டு உள்ளதால் பகல் நேரத்தில் அதிகளவில் புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இப்படி மழை காலத்தில் மழைநீர் தேங்குவதாலும், வெயில் காலத்தில் புழுதி பறப்பதாலும் இங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பித்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar