ஹோம் /விருதுநகர் /

காற்றின் தரத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவுரை

காற்றின் தரத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவுரை

போகி பண்டிகை

போகி பண்டிகை

Bhogi Festival 2023 : விருதுநகர் மாவட்டத்தில் போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

தமிழ்நாட்டில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பழைய பொருட்களை சேகரிக்கவும், குப்பகைகளை பெறுவதற்கும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'நமது முன்னோர்கள் பொங்கல் திருவிழாவுக்கு முன் வீட்டில் உள்ள தேவையில்லாத இயற்கையிலான பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.

தற்போது போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழையினால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள் பழைய டயர் மற்றும் காகிதம் ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு புகையால் நோய் பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே போகிப் பண்டிகையன்று பழைய பொருட்கள் எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பினர் பழைய பொருட்களை சேகரிக்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களிடம் பழைய பொருட்களை ஒப்படைக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Pongal 2023, Virudhunagar