விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றி வருகின்றன. குறிப்பாக வாராவாரம் நடக்கும் குறைதீர்ப்பு முகாம்மிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் மனு கொடுக்க ஆட்சியர் அலுவலகம் வந்து செல்வர்.
இந்நிலையில், வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருவதால், ஆட்சியர் அலுவலகம் வரும் மக்கள் ஒருவித அச்ச உணர்வுடனே வந்து செல்கின்றனர். ஏற்கனவே மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகம் காணப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இந்த நிலை தானா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
ஒன்று தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கோரினால் அவற்றை ஈவு இறக்கமின்றி கொலை செய்கின்றனர். இல்லை என்றால் விட்டு விடுகின்றனர் என கவலை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இப்படி தெரு நாய்கள் ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றி திரிவது குறித்து மனு கொடுக்க வந்த ஒருவர் பேசியபோது, “பாதுகாப்பு கருதி மனு கொடுக்க வரும் நம்மை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். இந்த நாய்களை மட்டும் எப்படி உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர் என்று தெரியவில்லை” என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உலா வரும் நிலையில் அவற்றை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியாளர் : அழகேஸ்வரன் - விருதுநகர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar