முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நாளை (சனிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நாளை (சனிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

மாதிரி படம்

மாதிரி படம்

Employment Camp : விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நாளை (சனிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நாளை (சனிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்ற, படித்த இளைஞர்களுக்காக மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நாளை சனிக்கிழமை (ஜனவரி 28ம் தேதி) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடத்தப்படும் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வேலை வழங்குபவர்களுக்கும், வேலை தேடுவோருக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்துவம் நோக்கில் ஏற்படுத்தப்படுகிறது.

அதன்படி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே.கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன. இந்த முகாமில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் வரை படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள வேலை வாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்களுடன் 28ம் தேதி காலை நேரடியாக வர வேண்டும் என்றும், அது மட்டுமில்லாமல் முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar