முகப்பு /விருதுநகர் /

அருப்புக்கோட்டை SBK கல்லூரியில் அரசு சார்பில் வேலை வாய்ப்பு முகாம்.. முந்தியடித்த இளைஞர்கள்!

அருப்புக்கோட்டை SBK கல்லூரியில் அரசு சார்பில் வேலை வாய்ப்பு முகாம்.. முந்தியடித்த இளைஞர்கள்!

X
அரசு

அரசு சார்பில் நடத்தப்பட்ட தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

Job Mela at Arupukottai | விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு நேர்முக தேர்வு எழுதினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar | Aruppukkottai

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்மில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.

விருதுநகரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாதந்தோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்முறை கடந்த 28ம் தேதியன்று அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்பிகே கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் 200க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் நேர்முக தேர்வுக்கு வந்திருந்த நிலையில், சிவகாசி, சாத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.

மேலும் நேர்முக தேர்வுக்கென இலவச பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களை தேர்ந்தெடுக்க ஏதுவாக, முகாம்மிற்கு வந்து நிறுவனங்கள் மற்றும் அவர்களின் தேவை குறித்த விபரங்கள் அடங்கிய பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.

காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடை பெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாம்மில் ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்ட நிலையில், நேர்முக தேர்வில் தேர்வான பெற்ற இளைஞர்களுக்கு அதற்கான பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.

First published:

Tags: Aruppukottai college, Job Fair, Local News, Virudhunagar