ஹோம் /விருதுநகர் /

28ம் தேதி விருதுநகரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

28ம் தேதி விருதுநகரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Virudhunagar Employment camp | விருதுநகரில் வரும் 28ஆம் தேதி தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விரும்பம் உள்ள இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் மாதத்தின் 2ஆம் மற்றும் 4ஆம் வெள்ளிக் கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 28ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள், விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி , தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

Must Read : இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் ஆகாய கங்கை அருவி...! புகைப்பட தொகுப்பு இதோ..!

இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 28ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்காது. மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Employment camp, Job Fair, Local News, Virudhunagar