ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் சகாயத்தின் மக்கள் பாதை அமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்- ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு

விருதுநகரில் சகாயத்தின் மக்கள் பாதை அமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்- ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு

X
வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள்

விருதுநகரில் மக்கள் பாதை இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் வந்து கலந்து கொண்டு நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் மக்கள் பாதை இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் வந்து கலந்து கொண்டு நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.

விருதுநகரில்பாண்டியன் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், சகாயம் ஐஏஎஸ் அவர்களின் மக்கள் பாதை இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 40க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் நேர்முக தேர்வுக்கு வந்திருந்த நிலையில், இதில் தேர்வாகும் இளைஞர்களுக்கு உடனே அதற்கான பணி ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேர்முகத் தேர்வில் எட்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை பயின்ற இளைஞர்கள் பங்கு பெறலாம் என கல்வி தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.

இதுகுறித்து பேசிய மக்கள் பாதை இயக்கத்தின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், இளைஞர்கள் பொருளாதார ரீதியாக சிறந்து விளங்க அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கவே இந்த முகாமை நடந்தி வருவதாகவும், இனி வரும் காலங்களில் இது போன்ற நிறைய வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

First published: