ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களின் விலை நிலவரம்... பாமாயில், பட்டாணி விலை குறைந்தது 

விருதுநகர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களின் விலை நிலவரம்... பாமாயில், பட்டாணி விலை குறைந்தது 

மளிகை பொருட்களின் விலை நிலவரம்

மளிகை பொருட்களின் விலை நிலவரம்

Virudhunagar District | விருதுநகர் மார்க்கெட்டில் இந்த வாரம் பாமாயில், பட்டாணி ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. மளிகை பொருட்களின் மொத்த விலை நிலவத்தை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி, வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்த வாரம் பாமாயில், பட்டாணி மற்றும் சில பருப்பு வகைகளின் விலை குறைந்து காணப்படுகிறது.

விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.3,030 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.6,270 ஆகவும், பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.15 விலை குறைந்து ரூ.1,500 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும், கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.100 விலை குறைந்து ரூ.4,900 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,300 ஆகவும் விற்பனையாகிறது. சீனி 100 கிலோ ரூ.3,740 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,200 ஆகவும் விற்கப்படுகிறது. பொரிகடலை 50 கிலோ ரூ.4 ஆயிரம் ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4,310 ஆகவும், 2ஆம் ரகம் ரூ.3,540 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,050 ஆகவும் விற்பனையாகிறது.

இதேபோல, ரவை 30 கிலோ ரூ.1,460 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.950 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.50 விலை குறைந்து ரூ.6,750 ஆகவும் விற்பனை ஆனது. பட்டாணி பருப்பு ரூ.6,800 ஆகவும், மசூர் பருப்பு ரூ.500 விலை குறைந்து ரூ.9,500 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.21,600 ஆகவும், ஏ ரகம் ரூ.21,500 ஆகவும், சி ரகம் ரூ.19,500 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.9,800 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.8 ஆயிரமாகவும் விற்பனை ஆனது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உளுந்து 100 கிலோ மூட்டை ரூ.7,500 முதல் ரூ.7,800 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.11 ஆயிரம் ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,200 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூட்டை ரூ.200 விலை குறைந்து ரூ.9,600 ஆகவும், பாசிப்பயறு ரூ.7,400 முதல் ரூ.9,100 வரையிலும் விற்பனையானது.

Must Read : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

துவரை 100 கிலோ மூட்டை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூட்டைக்கு ரூ.1,000 விலை குறைந்து ரூ.10 ஆயிரம் ஆக விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோவிற்கு ரூ.3,800 முதல் ரூ.3,900 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.5,500 முதல் ரூ.6,000 வரையிலும் விற்பனை ஆனது. முண்டு வத்தல் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையிலும் விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar