ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின் தடை

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின் தடை

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District Power Cut | விருதுநகர்  மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி உப மின் நிலையத்தில்  (சனிக்கிழமை) ( அக். 1)  மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் (சனிக்கிழமை) ( அக். 1) மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : விருதுநகர் விவசாயிகளின் குறைகளை தீர்க்க இலவச சேவை எண்கள் அறிவிப்பு

    மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

    தொட்டியபட்டி, புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், முத்துலிங்கபுரம், அழகாபுரி, கலங்காபேரி, கலங்காபேரிபுதூர், ராஜீவ்காந்தி நகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர், மொட்டமலை, வேப்பங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று ராஜபாளையம் கோட்ட செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

    Published by:Karthi K
    First published:

    Tags: Local News, Virudhunagar