ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் நாளைய மின்தடை பகுதிகள் - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க..

விருதுநகரில் நாளைய மின்தடை பகுதிகள் - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க..

மின் தடை

மின் தடை

Virudhunagar District | விருதுநகரில் நாளை (நவம்பர் 22) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கோட்டத்தில் உள்ள நென்மேனி, அப்பையநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Must Read : த்ரில் அனுபவம்... சில்லென்று கொட்டும் அருவி - குளித்து மகிழ கோவை குற்றாலம் வாங்க!

சிறுகுளம், வீரார்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, நல்லன்செட்டிபட்டி, நென்மேனி, இருக்கன்குடி, கோசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது என  மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar