ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்ட மக்களே உஷார்... நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட மக்களே உஷார்... நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

மின் தடை பகுதிகள் அறிவிப்பு

மின் தடை பகுதிகள் அறிவிப்பு

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுயில் உள்ள அப்பையநாயக்கன்பட்டி, இருக்கன் குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (25-01-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.

Must Read : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

மின் தடை பகுதிகள்:

சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட அப்பையநாயக்கன்பட்டி, இருக்கன் குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் சிறுகுளம், வீரர்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, நல்லன்செட்டிபட்டி, நென்மேனி, இருக்கன்குடி, கோசுகுண்டு மற்றும் என்.மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Virudhunagar