ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க...

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க...

மின் தடை

மின் தடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் விருதுநகர், வெம்பக்கோட்டை, செவல்பட்டி, கங்கர்கோட்டை, அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (21-01-2023) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என மின் செயற்பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

மின்தடை பகுதிகள்:

விருதுநகர்

விருதுநகர் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான விருதுநகர் பழைய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், மேல ரதவீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி மற்றும் புறநகர் பகுதிகளான குல்லூர் சந்தை,

பெரிய வள்ளி குளம், அல்லம்பட்டி, ஆர்.எஸ். நகர், சத்திர ரெட்டியபட்டி, என்.ஜி.ஓ. காலனி, வேலுச்சாமி நகர், லட்சுமி நகர், ஆமத்தூர், பாவாலி, பேராலி, பாண்டியன் நகரில் கே.கே.எஸ்.எஸ்.என். நகர், காந்தி நகரில் ஒரு பகுதி, முத்தால் நகரில் ஒரு பகுதி, சத்திய சாய் நகர், வடமலைகுறிச்சி, பேராலி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

செவல்பட்டி

செவல்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், அப்பையநாயக்கன்பட்டி, மேலாண்மறை நாடு, கொட்ட மடக்கிபட்டி, செவல்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, அன்னபூர்ணியாபுரம், அம்மையார்பட்டி, சக்கம்மாள்புரம், துலுக்கன்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

அதேபோல கங்கர்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கீழச்செல்லையாபுரம், மேலப்புதூர், கண்மாய் சூரங்குடி, சாணான்குளம், புல்லக்கவுண்டன்பட்டி, பந்துவார்பட்டி, புதுசூரங்குடி, நாரணாபுரம், வெள்ளையாபுரம், மார்க்கநாதபுரம், முத்தாண்டியாபுரம், தூங்கா ரெட்டிபட்டி, கோவில் செல்லையாபுரம், ஏழாயிரம் பண்ணை, இ.எல்.ரெட்டியாபட்டி, ஊத்துப்பட்டி, சங்கரபாண்டியாபுரம் மற்றும் ஜெகவீரம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

தாயில்பட்டி

வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், கோட்டைப்பட்டி, சல்வார் பட்டி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, சுப்பிரமணியபுரம், மடத்துப்பட்டி, கணஞ்சாம்பட்டி வனமூர்த்திலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை நகா், பாளையம்பட்டி, பெரியபுளியம்பட்டி, பந்தல்குடி, பரமேஸ்வரி பஞ்சாலை, வெம்பூா் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Must Read : பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி? அரசு மருத்துவர் விளக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்

மல்லி, ஈஞ்சர், நடுவப்பட்டி, மானகசேரி, மல்லிபுதூர், வேண்டுராயபுரம், மாயத்தேவன் பட்டி மற்றும் சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar