ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகள் மின் தடை தெரியுமா?

விருதுநகர் மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகள் மின் தடை தெரியுமா?

உஷார்... விருதுநகர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு 

உஷார்... விருதுநகர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு 

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (07-01-2023) மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து  அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சூலக்கரை துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, கூரைக்குண்டு, மாத்தி நாயக்கம்பட்டி, குல்லூர்சந்தை, அழகாபுரி, கே.செவல்பட்டி, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Powercut, Virudhunagar