ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் நாளை இங்கெல்லாம் மின்தடை - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க..! 

விருதுநகரில் நாளை இங்கெல்லாம் மின்தடை - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க..! 

விருதுநகர்

விருதுநகர்

Power Shutdown | விருதுநகர் மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் இடங்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டத்தில் உள்ள படிக்காசு வைத்தான்பட்டி மம்சாபுரம், வலையபட்டி, ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

எனவே, வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், பொத்தங்குளம் வீட்டு வசதி வாரியம், கரிசல்குளம், லட்சுமிபுரம், மம்சாபுரம், செண்பக தோப்பு, புதுப்பட்டி, ஒத்தப்பட்டி, வாழைகுளம், காந்தி நகர், இடையன்குளம், குன்னூர், சொக்கம்பட்டி, புதுப்பட்டி, பூவானி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

அதேபோல், பிள்ளையார் நத்தம், கிருஷ்ணன் கோவில், அழகாபுரி, தொட்டியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின் கோட்ட பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு செல்லும் ரகசியம் தெரியுமா?

இந்நிலையில், ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி உப மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.

எனவே தென்கரை, ரூரல் பீடர், ராஜசேகர் மில் பீடரில் உள்ள பாதைகளில் சிறப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மேட்டூர், சுந்தரராஜபுரம், எஸ். திருவேங்கடபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, தமிழ்நாடு சிறப்பு 11வது காவல் படை, வாட்டர் ஒர்க்ஸ் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மேல்தேக்க தொட்டிகளில் தேவையான நீரை முன்னதாகவே நிரப்புதல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Power Shutdown, Virudhunagar