ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்கள் ஏரியா இருக்கா?

விருதுநகரில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்கள் ஏரியா இருக்கா?

நாளைய மின்தடை பகுதிகள்

நாளைய மின்தடை பகுதிகள்

Virudhunagar Power cut areas | விருதுநகர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது  பகுதியில் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆதலால் இ்ந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விருதுநகர் பழைய பஸ் நிலையம் பகுதி, மேலரதவீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி, புறநகர் பகுதிகளான குல்லூர் சந்தை, பெரியவள்ளிக்குளம், ஆர்.எஸ். நகர், லட்சுமி நகர், பெத்தநாட்சி நகர், என்.ஜி.ஓ. நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

Must Read :  10 தலைகளுடன் ராவணன்... வியக்கவைக்கும் புதுக்கோட்டை குடுமியான்மலை சிற்பங்களின் புகைப்பட தொகுப்பு!

அதேபோல, வேலுச்சாமி நகர், சத்திரரெட்டியபட்டி, பேராலி, பாவாலி, பாண்டியன் நகர், முத்தால் நகரில் ஒரு பகுதி, காந்திநகரில் ஒரு பகுதி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், அல்லம்பட்டி, முத்துராமன் பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால், நாளை இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar