ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

விருதுநகரில் மின்தடை

விருதுநகரில் மின்தடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்களை மின் வாரிய அதிகார்கள் வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கோட்டத்தில் உள்ள சிவகாசி, நாரணாபுரம், பாறைப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன எனவே இந்த பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாறைப்பட்டி, விஸ்வநத்தம், சிவகாசி மாரியம்மன் கோவில், பஸ் நிலையம், ஜக்கம்மாள் கோவில் பகுதி, நாரணாபுரம் ரோடு, காரனேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேருரோடு, நெல்கடைமுக்கு, தபால் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், பராசக்திகாலனி, வடக்கு ரத வீதி, வேலாயுதம் ரோடு, அண்ணாகாலனி, பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

இதேபோல, லிங்கபுரம் காலனி, ராஜிவ்காந்திநகர், கண்ணாநகர், அம்மன்நகர், காமராஜர்புரம், 56 வீட்டுகாலனி, ஐஸ்வர்யாநகர், அரசன்நகர், சீனிவாசாநகர், பர்மாகாலனி, போஸ் காலனி, முத்துராமலிங்கநகர், இந்திராநகர், முருகன்காலனி, எம்.ஜி. ஆர்.காலனி, மீனாட்சி காலனி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Must Read :அழகு... அற்புதம் - கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்களின் லிஸ்ட்!

இந்நிலையில், விருதுநகர் மின் கோட்டத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பாதையில் பாலிமர் இன்சுலேட்டர்கள் மாற்றப்பட உள்ளது. ஆதலால் இந்நகர் ராமமூர்த்தி ரோடு தென்பகுதி, கல்லூரிச்சாலை, கோவிந்தராம்நகர், எல்.ஐ.ஜி. காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, பொதுமக்கள் நாளை மின்தடை செய்யப்படும் நேரங்களில், மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar