கோடை காலம் தொடங்கியுள்ளதால் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மு.புதூர் கிராம மக்கள் குடிநீர் வசதி இன்றி ஆற்றில் ஊற்று தோண்டி குடிநீருக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் தொடர்கதையாகி உள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
விருதுநகர் மாவட்டம் பூமாலைபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எம்.புதூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் குடிநீர் வசதியின்றி தவித்து வருகின்றனர். ஆற்றில் ஊற்று தோண்டி நீண்ட நேரம் காத்திருந்து அகப்பை மூலம் குடிநீரை இக்கிராம மக்கள் சேகரித்து வருகின்றனர்.
கோடை காலம் தொடங்கி உள்ளதால் தற்போது ஆற்றின் தோண்டப்பட்டு உள்ள ஊற்றுகளில் தண்ணீர் வரத்து குறையத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பெண்கள் வயதான முதியோர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஊற்று தண்ணீரை சேகரித்து செல்லும் அவலம் தொடர் கதையாகி வருகிறது. இதனால் இப்பகுதி பெண்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்து குடிநீரை எடுத்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது, பல ஆண்டுகளாக தங்களது கிராமத்தில் முறையான குடிநீர் வசதி இல்லாததால் ஆற்றில் ஊற்று தோண்டி குடிநீர் எடுக்கும் அவலம் பல தலைமுறையாக தொடர்கதையாகி வருகிறது.
தற்போது வெயில் காலம் தொடங்கி உள்ளதால் ஆற்றின் ஊற்றுகளில் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. மேலும் ஆற்றில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர் கதையாகி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.