முகப்பு /விருதுநகர் /

"பாண்டிய நாட்டு மக்களின் மனதை வென்ற ஆதித்த கரிகாலன்" விருதுநகர் ரசிகர்கள் கருத்து!

"பாண்டிய நாட்டு மக்களின் மனதை வென்ற ஆதித்த கரிகாலன்" விருதுநகர் ரசிகர்கள் கருத்து!

X
பொன்னியின்

பொன்னியின் செல்வன் 2 ரிவ்யூ

ponniyin selvan 2 Virudhungar review | பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கல்கி எழுதிய புனைவு கதையான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்ட நிலையில், தற்போது மணிரத்னம் அதில் வெற்றி கண்டுள்ளார். மொத்தம் இரண்டு பாகங்களாக தயாரான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் நாள் காட்சிக்கே பெண்கள், குழந்தைகள் என மக்கள் பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர்.

முதல் பாகத்தில் வந்தியத்தேவன் அனைவரின் மனதிலும் இடம் பிடித்ததை போல இதில் ஆதித்த கரிகாலன் அனைவரையும் கவர்ந்துள்ளார்.படம் பார்த்த ரசிகர்கள் பலர் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவே வாழ்ந்துள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

முதல் பாகத்தை போல இதில் பெரிதாக பாடல் இல்லை என்றாலும் கதை சுவாரஸ்யமாகவே நகர்ந்தது என்றனர்.

ALSO READ | விருதுநகர் - திண்டுக்கல் இடையே ரயில்கள் இயக்கப்படுமா? - எதிர்பார்ப்பில் பயணிகள்..

மொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் நீண்ட கனவாக இருந்த பொன்னியின் செல்வன் தற்போது முழுமையாக நிறைவேறி விட்டது. இனி இது போல் நிறைய வரலாற்று படங்களை தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ponniyin selvan, Virudhunagar