ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் விஜய் ரசிகர்களின் வாரிசு ட்ரைலர் கொண்டாட்டம்..!

விருதுநகரில் விஜய் ரசிகர்களின் வாரிசு ட்ரைலர் கொண்டாட்டம்..!

X
வாரிசு

வாரிசு தான் துணிவுடன் வெற்றி பெறும்.... வாரிசை கொண்டாடிய விஜய் ரசிகர்கள் 

Varisu Trailer Celebration | வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் விருதுநகரில் ட்ரைலரை திரையில் பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் விருதுநகரில் ட்ரைலரை திரையில் பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

வாரிசு படம் :

நடிகர் விஜய் நடித்து தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ள படம் தான் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க விஜய்யுடன் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள இந்தப்படம் குடும்பம் சம்பந்தமான ஒரு கதை என்று கூறப்படும் நிலையில் ஜனவரி 4 ம் தேதி மாலை 5 மணியளவில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

வரும் பொங்கலுக்கு விருதுநகரில் உள்ள அப்சரா மற்றும் அமிர்தராஜ் திரையரங்குகளில் வாரிசு படம் வரவுள்ள நிலையில், இரண்டு திரையரங்களிலும் ட்ரைவர் திரையிடப்பட்டது. இரண்டு திரையரங்க வாசலிலும் திரண்ட விஜய் ரசிகர்கள் ட்ரைலர் வெளியீட்டை மேளம் கொட்டி பாலபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பேமிலி ஆடியன்ஸ்:

ட்ரெய்லர் பார்த்த ரசிகர்கள் விஜய் ஸ்டைலில் வழக்கம் போல அவர் மாஸ் காட்டி விட்டதாகவும், பொதுவாகவே அவருக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம் இதில் வேறு குடும்பம் குடும்பம் என்று சொல்கிறாரா... சொல்லவே வேண்டாம் இந்த பொங்கல் வின்னர் தளபதியின் வாரிசு தான் என்கின்றனர்.

ஏற்கனவே துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், தற்போது வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருப்பது போட்டிக்கான களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.

First published:

Tags: Actor Vijay, Local News, Trailer, Varisu, Vijay fans, Virudhunagar