ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி

விருதுநகரில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி

சுதந்திர

சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி

Virudhunagar | விருதுநகரில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.

விருதுநகர் கே‌.வி.எஸ் பள்ளி கலையரங்கத்தில் மத்திய தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சகம் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த மூன்று நாள் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் முதல் நாளான நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். இதில் பள்ளி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கொண்டாடி வரும் நிலையில் அத்தகைய சுதந்திரம் அடைய காரணமாக இருந்த தமிழகத்தை சேர்ந்த பல அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களான மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை, வேலுநாச்சியார், வீரன் சுந்தரலிங்கம் போன்ற பல சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் குறித்த தகவல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் புதுமைப்பெண் திட்டம் மற்றும் ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் ஸ்டால்களும் இடம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க : கல்வி, வியாபாரத்தில் முன்னேற... வழிபட வேண்டிய திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்!

நிகழ்வில் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளும், நாட்டுப்புற கலைஞர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், பல சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்ததாகவும் இதில் கலந்து கொண்ட மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இம்மாத 4ம் தேதி வரை நடைபெற உள்ள கண்காட்சிக்கு பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட உள்ள நிலையில், பார்வையாளருக்கென நிறைய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar