ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் சிறுதானியங்களை கொண்டு சத்துமாவு தயாரித்து அசத்தி வரும் நபர்..!

விருதுநகரில் சிறுதானியங்களை கொண்டு சத்துமாவு தயாரித்து அசத்தி வரும் நபர்..!

X
விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District News : அனைவரும் எளிதில் சாப்பிட கூடிய வகையில் தானியங்களையும் பயிறு வகைகளையும் வைத்து சத்துமாவு தயாரித்து வெளியூர்களுக்கு சப்ளை செய்து அசத்தி வருகிறார் விருதுநகரை சேர்ந்த சக்திவேல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

உணவே மருந்து என்றிருந்த காலம் போய் இன்று மருந்தே உணவு என்ற காலம் வந்து விட்டது. சிறுதானியங்கள் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் என்ன தான் பேசினாலும் அதை வாங்கி வந்து சமைத்து சாப்பிடும் அளவிற்கு நம்மில் யாருக்கும் பொறுமையும் இல்லை.

இந்நிலையில், அனைவரும் எளிதில் சாப்பிட கூடிய வகையில் தானியங்களையும், பயிறு வகைகளையும் வைத்து சத்துமாவு தயாரித்து வெளியூர்களுக்கு சப்ளை செய்து அசத்தி வருகிறார் விருதுநகரை சேர்ந்த சக்திவேல்.

விருதுநகர் ரோசல்பட்டி பகுதியில் அமைந்துள்ள அவரது தொழிற்சாலைக்கு சென்றபோது, சிறு தானியங்களையும், பயிறு வகைகளையும் முளைக்க வைத்து அதன் சத்து குறையாமல் அதை அரைத்து சத்துமாவாக்கி வரும் செயல்முறையை நமக்கு விளக்கினார்.

இதையும் படிங்க : விருதுநகரில் கிறிஸ்துமஸ் தினத்தன்று விடிய விடிய ஜொலித்த குடில்கள்..! 

ஹெல்த் மிக்ஸ் :

இந்த சத்துமாவிற்கு ஹெல்த் மிக்ஸ் என பெயரிட்டுள்ளவர் இதை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் இதிலுள்ள சத்துக்களை பெற முடியும் என்றார். விட்டமின்கள் நிறைந்து காணப்படும் இந்த சத்துமாவை ஆறு மாதம் ஆன குழந்தைக்கு கூட அடர்த்தி குறைவான பாலில் கலந்து கொடுக்கலாம் என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது இந்த ஹெல்த் மிக்ஸை சென்னை போன்ற பெருநகரங்களுக்கு சப்ளை செய்து வருவதாகவும், வீட்டு விஷேசங்களுக்கு மொத்தமாக ஆர்டர் செய்தால் அதையும் அவரவர் விரும்பிய அளவுகளில் செய்து வருவதாக தெரிவித்தார்.

செய்தியாளர் : அழகேஸ்வரன் - விருதுநகர்

First published:

Tags: Local News, Virudhunagar