விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்த கோயில் அடர் வனப்பகுதியில் இருப்பதாலும், சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது.
கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு அனுமதி கிடையாது. வனப்பகுதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பக்தர்கள் உணவு சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து கோயில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சதுரகிரிக்கு மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுதி வழங்கப்படுவது வழக்கம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில் நேற்று (வெவ்வாய் கிழமை) காலை முதல் சதுரகிரி மலைக்குச் சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. இதனால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மலையேறி சாமியை தரிசித்தனர். அதேபோல, இன்றும் அனுமதி வழங்கப்பட்டது.
Must Read : ராமநாதபுரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!
இந்நிலையில், நாளை (வியாழக் கிழமை) காலை 7மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மலையேறுவதற்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. எனினும் பக்தர்கள் கூட்டம் நாளை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Temple, Virudhunagar