முகப்பு /விருதுநகர் /

காவலர்கள் பற்றாக்குறையால் விருதுநகரில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையங்கள்..

காவலர்கள் பற்றாக்குறையால் விருதுநகரில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையங்கள்..

X
விருதுநகரில்

விருதுநகரில் பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையங்கள்

Virudhunagar News | காவலர் பற்றாக்குறையால் விருதுநகரில் நகர் பகுதியில் பல புறக்காவல் நிலையங்கள் முறையாக செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது.

  • Last Updated :
  • Virudhunagar, India

காவலர் பற்றாக்குறையால் விருதுநகரில் நகர் பகுதியில் பல புறக்காவல் நிலையங்கள் முறையாக செயல்படாமல் பூட்டியே இருப்பதாகவும், கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை முன்னெச்சரிக்கையாக கண்டறிந்து தடுக்கவும், பொது மக்களின் பாதுகாப்பகற்காவும் ஆங்காங்கே புறக்காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக விருதுநகரின் நகர் பகுதியில் மதுரை சாலை, சிவகாசி சாலை , அல்லம்பட்டி முக்கு ரோடு மற்றும் அல்லம்பட்டி தரைப்பாலம் பகுதியில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

தொடக்கத்தில் இந்த புறக்காவல் நிலையங்களில் தனித்தனியாக காவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது புறக்காவல் நிலையங்கள் முறையாக செயல்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மதுரை சாலை , சிவகாசி சாலை, அல்லம்பட்டி தரைப்பாலம் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையங்கள் எப்போதும் பூட்டியே கிடக்கின்றன.

இதையும் படிங்க : ஆப்பிரிக்க வைரஸ் பாதிப்பால் திடீரென உயிரிழந்த பன்றிகள்.. ராசிபுரத்தில் பரபரப்பு..

இதனால், நகர்புறங்களில் கொலை , கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இது தொடர்பாக பேசிய விருதுநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் காளிதாஸ், முன்பு புறக்காவல் நிலையங்கள் முறையாக செயல்பட்ட போது குற்ற சம்பவங்கள் கட்டுக்குள் இருந்ததாகவும், தற்போது நிலவும் காவலர் பற்றாக்குறை காரணமாக புறக்காவல் நிலையங்கள் சில இடங்களில் பூட்டிய படியே இருப்பதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து புறக்காவல் நிலையங்களை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    First published:

    Tags: Local News, Virudhunagar